mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / தீர்ப்புக்காக காத்திருக்கும் உள்ளாட்சி மனுத் தாக்கல்!

தீர்ப்புக்காக காத்திருக்கும் உள்ளாட்சி மனுத் தாக்கல்!

December 6, 2019 10:16 am

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முழுதாக நடக்குமா, ஊரகப் பகுதிகளில் மட்டும் நடக்குமா, ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நடக்குமா என்பன போன்ற பல கேள்விகளுக்கு (டிசம்பர் 6) காலை உச்ச நீதிமன்றம் விடையளிக்க இருக்கிறது. 2016ஆம் ஆண்டோடு முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலத்தையடுத்து புதிய தேர்தல் நடத்துவதில் மூன்று வருடங்களாக சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை அடுத்து கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம், ‘உள்ளாட்சித் தேர்தல் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே இரண்டு கட்டங்களாக இம்மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும்’ என்று அறிவித்தது. நகர, மாநகரப் பகுதிகளுக்கான தேர்தல் பற்றி ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தாக்கல் செய்த மனு, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று வாக்காளர்கள் தொடுத்த மனு என உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மறுவரையறை முடியாத ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளிவைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகளிடம், ‘ஒன்பது மாவட்டங்களுக்கும் தேர்தலைப் தள்ளிவைக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தது தமிழக தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் நடத்தினால் ஒன்றாகவே நடத்த வேண்டும் இல்லையேல் நடத்தக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் ஒரு கருத்து தெரிவிக்க, அப்படியென்றால் உள்ளாட்சித் தேர்தல் அந்த ஒன்பது மாவட்டங்களைத் தவிர மீதி மாவட்டங்களில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குழப்பத்துக்கு இடையேதான் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கிராமப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் (டிசம்பர் 6) தொடங்குகிறது. தீர்ப்பு இன்று காலை 10.30 என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒருவேளை தாமதமானால், தீர்ப்பு வரும் வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாமா என்று வேட்பாளர்கள் குழம்பியிருக்கிறார்கள். மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்களும் வேட்புமனுவை வாங்கலாமா என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்குமா, முடங்குமா என்று தெரியும். ஆனால் கலெக்டர்களை எதற்கும் தயார் நிலையில் இருக்குமாறு மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளன.

About CmsnewsAdmin@123

Check Also

ராகுல், மம்தா பானர்ஜி தன்னுடன் விவாதிக்கத் தயாரா?: அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என உள் துறை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *