mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பிரியங்காவின் பாதுகாப்பு குறைபாடு எதேச்சையாக நடந்தது: அமித் ஷா விளக்கம்!

பிரியங்காவின் பாதுகாப்பு குறைபாடு எதேச்சையாக நடந்தது: அமித் ஷா விளக்கம்!

December 4, 2019 11:19 am

மத்திய அரசு அண்மையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொண்டது. இதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி பிரியங்கா காந்தியின் டெல்லி இல்லத்துக்குள் ராகுல் காந்தி காரைப் போன்றே இருக்கும் இன்னொரு காங்கிரஸ் நிர்வாகியின் கார் அனுமதிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. மத்திய டெல்லி லோதி தோட்டத்திலுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி, டாடா சஃபாரி கார் ஒன்றை அனுமதித்தனர். அது ராகுல் காந்தி கார் என்று நினைத்ததாகவும், ஆனால் அது மீரட்டில் வசிக்கும் சந்திரசேகர் தியாகியின் கார் என்றும் பின்னர் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதால்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பிரியங்காவின் கணவர் வதோராவும் இதுகுறித்து தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் (டிசம்பர் 3) மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரியங்காவின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடு எதேச்சையாக நடந்தது. இதற்கும் எஸ்பிஜி விலக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை. அந்தக் குடும்பத்துக்கு மட்டுமல்ல 130 கோடி இந்தியர்களுக்கும் மத்திய அரசுதான் பாதுகாப்பு வழங்குகிறது” என்று குறிப்பிட்டார். மேலும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனபோதும் பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் வேறு கார் புகுந்த மாதிரி வேறேதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று காங்கிரஸார் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *