mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

December 5, 2019 10:39 am

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் உச்ச, உயர் நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று பொன்.மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஆவணங்களை ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமையிடம் வழங்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையே, பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது பொன்.மாணிக்கவேல் ஏடிஜிபி அபய்குமார் சிங்கிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்தவுடன் விரைவில் அவற்றை ஒப்படைப்பதாகவும் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது எனது கடமை என்றும் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிடி வடிவில் இருப்பதாகவும், அதை ஒருங்கிணைந்து விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

ராகுல், மம்தா பானர்ஜி தன்னுடன் விவாதிக்கத் தயாரா?: அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என உள் துறை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *