mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ஹைதராபாத் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டர்!

ஹைதராபாத் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டர்!

December 6, 2019 10:15 am

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவு, மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் இன்று டிசம்பர் 6 அதிகாலை, ஷாட் நகரில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெலங்கானா போலீஸ் வட்டாரத்தை மேற்கோள் காட்டி இந்த என்கவுன்ட்டரை உறுதி செய்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள ஷம்ஷாபாத் டோல்கேட் அருகே கால்நடை மருத்துவரான இளம்பெண் காணாமல் போனார். மறுநாள் அவரது எரிந்த உடல் அதே பகுதியில் மீட்கப்பட்டது. ஆரம்ப ஆய்வின்படி, அவர்களில் ஒருவன் அப்பெண்ணின் ஸ்கூட்டி டயரை வேண்டுமென்றே பஞ்ச்சர் செய்துவிட்டான். மீதியிருப்பவர்கள் அவருக்கு உதவுவது போல அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். அதன் பின் அப்பெண்ணின் உடலை அருகிலுள்ள பாலத்திற்கு அடியில் கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர்.

தெலங்கானாவில் நடந்த இந்த சம்பவம் தேசம் முழுதும் கடுமையாக எதிரொலித்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை அப்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து, விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். ஆயினும் முதல்வர் சந்திரசேகர ராவ் இவ்விவகாரத்தில் அப்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டு முதல்வரின் வீடு முற்றுகையிடப்பட்டது. தெலங்கானா முழுதும் போராட்டங்கள் வெடித்தன. தேசிய அளவில் சந்திரசேகர ராவுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. இதற்கிடையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் முகமது அரீஃப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சிந்தகுந்தா சென்னகேஷவுலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை நேற்று நள்ளிரவு, அந்த இளம்பெண்ணுக்கு கொடூரம் நடந்த இடத்துக்கு ’விசாரணைக்காக’ போலீஸார் அழைத்துச் சென்றனர். பொதுவாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பவ இடத்துக்கு குற்றஞ்சாட்டப்பவர்களை அழைத்துச் சென்று செய்முறை விளக்கத்தோடு போலீஸ் விசாரிப்பது வழக்கம்தான். அந்த வகையில் அவர்களை பகலில் அழைத்துச் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் இரவில் அழைத்துச் சென்றனர் போலீஸார்.

About CmsnewsAdmin@123

Check Also

ராகுல், மம்தா பானர்ஜி தன்னுடன் விவாதிக்கத் தயாரா?: அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என உள் துறை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *