mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / மாநிலம்

மாநிலம்

இனி மாநில அளவிலே முட்டை டெண்டர்!

Published on:August 30, 2019 11:18 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம், வர்த்தகம் 0

இனி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவிலே முட்டை டெண்டர் நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆண்டுக்கு, பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளைக் கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளிமாநில கோழிப் பண்ணைகள் …

Read More »

சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமாகிவிட்டார்!

Published on:August 7, 2019 11:48 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (ஆகஸ்ட் 6) இரவு காலமாகிவிட்டார். உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்த சுஷ்மா ஓய்வெடுத்து வந்தார். நேற்று இரவு 7.30 மணி வாக்கில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டு ட்விட் செய்த சுஷ்மா, ‘நன்றி பிரதமரே நன்றி… இந்த நாளுக்காகத்தான் என் வாழ்க்கையில் காத்திருந்தேன்’ என்று உணர்ச்சிகரமாகப் …

Read More »

தமிழக மாணவி முதலிடம்: சித்தா அகில இந்திய தேர்வு

Published on:August 3, 2019 12:37 pm

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

சித்தா படிப்பிற்கான அகில இந்திய தேர்வில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் முதலிடம் பிடித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன் கணேசனின் மகள் பொன்மணி. இப்பெண் சுப்பிரமணியபுரத்திலுள்ள அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் 2013ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பை நிறைவு செய்தார். அவர் தனது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,062 மதிப்பெண்களை பெற்று சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இளநிலை சித்த …

Read More »

மருத்துவ மாணவர்கள் போராட்டம்: நெக்ஸ்ட் தேர்வு!

Published on:August 3, 2019 12:35 pm

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. கடந்த 31ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் (ஆகஸ்ட் 2) வகுப்பைப் புறக்கணித்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மருத்துவத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. முதலில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு …

Read More »

சர்ச்சையைக் கிளப்பிய சசிரேகா

Published on:July 2, 2019 11:10 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

அதிமுகவில் புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை கடந்த ஜூன் 29 ஆம் தேதி அறிவித்தனர். இந்தப் பட்டியலில் அமமுகவில் இருந்து வெளியேறி 28 ஆம் தேதி முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த சசிரேகாவும் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவர் இணைந்த பிறகு தான் அதிமுகவினருக்கு இதுவரை இடப்பட்ட தடை நீக்கப்பட்டு ஜூலை 1 முதல் ஊடகங்களில் பேசலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சியில் இருந்தபோது முதல்வர், துணை …

Read More »

மதுரையில் லேப்டாப் கேட்டுப் போராடிய மாணவர்கள் மீது தடியடி!

Published on:June 29, 2019 11:36 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

கடந்த ஜூன் 24ஆம் தேதி ஈரோட்டில் தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கக் கேட்டுப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட நிலையில் (ஜூன் 28) மதுரையில் போராடிய மாணவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் லேப்டாப் வழங்கவில்லை என்று கூறி நான்கு நாட்களுக்கு முன்பு …

Read More »

பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு!

Published on:June 26, 2019 12:07 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

ஈரோட்டில் பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை என்னும் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கினர். அப்போது, அந்தப் பள்ளியில் கடந்த வருடம் படித்த முன்னாள் …

Read More »

திமுகவுக்கு டிடிவி ஆதரவு!

Published on:June 26, 2019 12:03 pm

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தார் கொறடா ராஜேந்திரன். இதை ஏற்று மூவருக்கும் விளக்கம் கேட்டுக் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் …

Read More »

தமிழகம் சுகாதாரத்தில் பின்னடைவு: நிதி ஆயோக்!

Published on:June 26, 2019 11:54 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

சுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் மருத்துவம், சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுவருகிறது. உலக வங்கியின் ஒத்துழைப்புடனும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உதவியுடனும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்படுகின்றன. நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு உண்டாக்குதல், நோய்கள் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு …

Read More »

சட்டமன்றக் கூட்டம்; தயாராகும் தமிழக முதல்வர்

Published on:June 24, 2019 3:23 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

சட்டமன்றக் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி கூட இருக்கின்ற நிலையில்,அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பொதுவாகவே சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன் எதிர்க்கட்சியினர்தான் தீவிரமான தயாரிப்பு வேலைகளில் இறங்குவார்கள். அதேபோல முதல்வரும் இம்முறை அனைத்துத் துறைச் செயலாளர்களையும் தொடர்புகொண்டு, முக்கியமான கோப்புகள் அவற்றின் நிலைகள், முக்கியத் திட்டங்களின் தற்போதைய நிலை என கேட்டு வருகிறார். இந்த வாரம் அனைத்து துறை செயலாளர்களின் கூட்டத்தைக் …

Read More »