mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

தற்கொலை புள்ளிவிவரங்கள்: ஐஐடி

Published on:November 15, 2019 12:05 pm

Breaking News, E.Paper, mavattam, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவொரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம், இதுவரை ஐஐடிகளில் தற்கொலை செய்துகொண்டவர்களின் புள்ளிவிவரங்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் கடந்த பத்து ஆண்டுகளில் சென்னை ஐஐடியில்தான் அதிகளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்களைத் தொகுத்ததில் தெரியவந்ததாக தி …

Read More »

வோடாபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!

Published on:November 15, 2019 12:03 pm

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், தொலைபேசி சேவை நிறுவனங்களான ஏர்டெல் ரூ. 23,045 கோடி, வோடபோன்-ஐடியா ரூ.50,921 கோடி என பெருநஷ்டம் அடைந்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் (ஏஜிஆர்) கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் உரிமத்தொகை, அலைக்கற்றைக்(ஸ்பெக்ட்ரம்) கட்டணம் ஆகியவை அரசுக்குச் …

Read More »

வசனங்களை மனப்பாடம் செய்யும் கங்காணா: ஜெ. பயோபிக்!

Published on:November 15, 2019 12:00 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

ஜெயலலிதாவின் பயோபிக்காக உருவாகிவரும் தலைவி படத்திற்காக தமிழ் கற்பது கடினமாக உள்ளது என்றும், இதனால் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன் என்றும் நாயகி கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவரும் படம் தலைவி. பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நாயகியாக நடிக்கிறார். ஏ.எல். விஜய் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டாண்டுகளாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றிய முக்கியமான தகவல்களை சேகரித்து, இப்படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் …

Read More »

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

Published on:November 14, 2019 1:09 pm

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மதுரை பிபி குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் …

Read More »

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், செல்லுபடி ஆகாது:பாஸ்கரன்!

Published on:November 14, 2019 1:08 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக விஜயகாந்தை விமர்சித்து அமைச்சர் பாஸ்கரன் பேசியது அதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். அதேபோல நடிகர் ரஜினிகாந்தும் கட்சி ஆரம்பித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தில் சரியான தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. …

Read More »

வாடகை பாக்கியைக் குறைக்க அரசு பேரம்: ஸ்டாலின்

Published on:November 14, 2019 1:07 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அளிக்க வேண்டிய வாடகை பாக்கியை அரசு குறைக்க முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள 17 ஏக்கர் தமிழக அரசு நிலத்தை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சென்னை கிரிக்கெட் மன்றமும் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகின்றன. 1995ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் 20 வருடத்துக்கு மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, முதல் ஐந்து வருடத்துக்கு …

Read More »

ஸ்டாலின் விசயத்தில் மன்னிப்புக் கேட்க மாட்டேன்: மாஃபா பாண்டியராஜன்

Published on:November 14, 2019 12:52 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என்று தான் கூறவில்லையென அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் பல இடங்களில் அவரது உருவப் …

Read More »

ரஜினி ஒரு அரசியல் தலைவரே கிடையாது: எடப்பாடி!

Published on:November 12, 2019 11:46 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல் தலைவரே கிடையாது, அவர் சொல்வதற்கெல்லாம் கவலைப்படுவானேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (நவம்பர் 11) கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுமை மிகுந்த தலைவர்களுக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் அப்படியேதான் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் அரங்கில் விவாதமானது. அதாவது ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின் அந்தந்த …

Read More »

தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி!

Published on:November 12, 2019 11:44 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம், வர்த்தகம் 0

உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்தது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தரவுகளின்படி, தற்போது உற்பத்தித் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. இது ஒரு வருடத்துக்கு முன்பிருந்த 4.8 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 3.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தித் துறையைப் பொறுத்தமட்டில், செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் 8.2 …

Read More »

அயோத்தி, பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: தி.க தீர்மானம்!

Published on:November 12, 2019 11:43 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

அயோத்தி வழக்கின் தீர்ப்பைப் போல, பாபர் மசூதி இடிப்பு வழக்கையும் விரிவாக விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனத் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது. திராவிடர் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் (நவம்பர் 11) நடைபெற்றது. அதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முடிவில் நீட் …

Read More »