mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / உலகம்

உலகம்

ஈராக்கிற்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Published on:January 9, 2020 11:14 am

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஜனவரி 8 ஆம் தேதி ஈரான் நடத்திய மிசைல் தாக்குதலையடுத்து, வளைகுடாவில் போர் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள பேச்சு மேலும் விவகாரத்தை அனலாக்கியுள்ளது. இதுபற்றி டிரம்ப் பேசுகையில், “ ஈரானிய ஆட்சியின் நேற்றிரவு தாக்குதலில் எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை. நாங்கள் எந்தவிதமான உயிரிழப்புகளையும் சந்திக்கவில்லை, எங்கள் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், எங்கள் …

Read More »

போர் பதற்றத்தால் இந்திய பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Published on:January 8, 2020 5:30 pm

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

மேற்கு ஆசியாவில் உருவான போர் பதற்றத்தால் இந்திய பங்கு சந்தைகளில் இன்று ஏற்ற இறக்கம் காணப்பட்டது. சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் 400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 40,754 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. பிறகு ஓரளவு சரிவில் இருந்து மீண்டு, வர்த்தக முடிவில் 51 புள்ளி 73 குறைந்து 40,817 புள்ளி 74 …

Read More »

அமெரிக்காவுக்கு எதிரான யுத்தம்: ஈரான்

Published on:January 7, 2020 9:52 am

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஜனவரி 3 ஆம் தேதி ஈரானின் ராணுவ ஜெனரல் சுலைமானியை ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கா கொலை செய்ததை அடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான போர்ப் பதற்றம் வளைகுடாவில் அதிகரித்து வருகிறது. சுலைமானியின் உடல் டெஹ்ரான் கொண்டுவரப்பட்டடதை அடுத்து ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக அணிவகுத்துச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்வலத்தின் முடிவில் சுலைமானியின் மகள் செயினாப் சுலைமானி, “என் தந்தையின் மரணம் எங்களை உடைந்துபோகச் செய்யாது. அவரது ரத்தம் வீணாய் …

Read More »

அணு சக்தி ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவிப்பு!

Published on:January 6, 2020 11:00 am

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ஈரான். இதன் மூலம் யுரேனிய வளத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு இனி கட்டுப்பாடுகள் இருக்காது என்றும், ஆனாலும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரொஹானியின் இந்த முடிவு (ஜனவரி 5) ஈரானின் அரசு …

Read More »

வோடாபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!

Published on:November 15, 2019 12:03 pm

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், தொலைபேசி சேவை நிறுவனங்களான ஏர்டெல் ரூ. 23,045 கோடி, வோடபோன்-ஐடியா ரூ.50,921 கோடி என பெருநஷ்டம் அடைந்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் (ஏஜிஆர்) கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் உரிமத்தொகை, அலைக்கற்றைக்(ஸ்பெக்ட்ரம்) கட்டணம் ஆகியவை அரசுக்குச் …

Read More »

உச்சநீதிமன்ற தீர்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு!

Published on:November 9, 2019 2:34 pm

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் 1,045 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கு வழங்கியும், அதில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. சன்னி வஃக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் (நவம்பர் 9) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “அயோத்தி …

Read More »

புவி வெப்பம் அதிகரிப்பு : 11,000 விஞ்ஞானிகள் அறிவிப்பு!

Published on:November 7, 2019 12:46 pm

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

புதுடெல்லி: உலகம் முழுவதும் பருவநிலை அவசரநிலையை, 153 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அதிகரிக்கிறது, பனி மலைகள் உருகுகின்றன, கடல் மட்டம் உயர்நது வருகிறது, பருவநிலை காலங்களும் மாறுகின்றன. காற்று மாசு அதிகரித்து, மக்கள் சுவாசிப்பதற்கு கூட சுத்தமான காற்று கிடைக்காத நிலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பருவநிலை மாற்ற அவசரநிலையை உலகம் முழுவதும் 153 நாடுகளைச் …

Read More »

டிவி, கணினி, மொபைல்: 220 கோடி பேருக்குப் பார்வை பாதிப்பு!

Published on:October 9, 2019 4:09 pm

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் பல. செல்போன்களால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், வெளியுலகு தொடர்பு இல்லாமல் கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உலகில் 220 கோடி பேருக்குப் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக …

Read More »

கோலி பறிகொடுத்த ‘நம்பர் 1’ இடம்!

Published on:September 4, 2019 11:56 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் (செப்டம்பர் 3) வெளியானது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. இருப்பினும் நேற்று வெளியான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தனது முதலிடத்தை ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வீரர் …

Read More »

இன்று முஸ்லிம், நாளை சீக்கியர்: இம்ரான் கான்

Published on:September 3, 2019 12:37 pm

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

இந்தியாவுடன் போரிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை என்றும் அதுபோன்றதொரு முன்னெடுப்பில் பாகிஸ்தான் என்றைக்கும் ஈடுபடாது எனவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். லாகூரில் நடந்த சர்வதேச சீக்கியர்கள் மாநாட்டில் நேற்று செப்டம்பர் 2 ஆம் தேதி பேசிய இம்ரான் கான், “இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தால், அது ஒட்டு மொத்த உலகத்துக்குமான ஆபத்தாகவே முடியும். எந்தப் பிரச்சினைக்கும் …

Read More »