mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / அரசியல்

அரசியல்

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

Published on:September 17, 2019 1:03 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி, ஆர்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியே இருக்க வேண்டும் என்று இந்தி தினத்தை ஒட்டி அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு வலுக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு …

Read More »

ஒரு நாளைக்கு 3,000 வாகன வழக்குகள் டார்கெட்!

Published on:September 16, 2019 12:11 pm

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கிலும் அபராதம் விதிக்கப்படுவதால் வாகனத்தை வீட்டை விட்டு வெளியே எடுக்கவே தயங்கும் பொதுமக்கள், சிறிய தவற்றுக்கே மாதச் சம்பளம் முழுவதையும் அபராதமாகச் செலுத்த வேண்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையே மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த …

Read More »

தமிழ் புறக்கணிக்கப்படுகிறது: ஸ்டாலின்

Published on:September 16, 2019 12:09 pm

Breaking News, E.Paper, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ம.தி.மு.க. சார்பில் சென்னை நந்தனத்தில் (செப்டம்பர் 15) நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது” எனக் கூறினார். மு.க. ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் கூறியதாவது: “இந்த மாநாட்டை திறந்து வைப்பது என்பது என் வாழ்நாளில் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன். அறிஞர் அண்ணா …

Read More »

5, 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை

Published on:September 14, 2019 11:22 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாநில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்கப்படுகிறது. கட்டாய தேர்ச்சியினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்திலும் சில மற்றங்களை மத்திய …

Read More »

மோடி டிரெய்லரே போதும்: கபில் சிபல்

Published on:September 14, 2019 11:20 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

மோடி கூறிய, ‘தேசம் பாஜக ஆட்சியின் டிரெய்லரைப் பார்த்துவிட்டது. முழுப்படம் இனிமேல்தான் பாக்கியிருக்கிறது’ எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கிண்டல் செய்திருக்கிறார். கபில் சிபல், மத்திய பா.ஜ.க அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 100 நாட்களை நிறைவு செய்து ஒரு வாரம் ஆகிய நிலையில், பொருளாதார மந்தநிலை, மோட்டர் வாகன சட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்டு மத்திய அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் விமர்சித்திருக்கிறார். …

Read More »

முதலீடுகள் தொடர்பாக ஸ்டாலினுக்கு பதில்: அமைச்சர் சம்பத்

Published on:September 14, 2019 11:18 am

Breaking News, E.Paper, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

அதிமுக ஆட்சியில் வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொழில் துறை அமைச்சர் சம்பத் பதிலளித்துள்ளார். முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு கடந்த 10ஆம் தேதி இரவு தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் என விமர்சனம் செய்தார். மேலும், “இரண்டு முறை நடந்துள்ள முதலீட்டாளர்கள் …

Read More »

ஸ்டாலின் மீது எடப்பாடி காட்டம்!

Published on:September 12, 2019 10:41 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் என விமர்சனம் செய்தார். வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வெள்ளை …

Read More »

மே.வங்கத்தில் மோட்டார் வாகனச் சட்டம் இல்லை: மம்தா பானர்ஜி!

Published on:September 12, 2019 10:40 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

புதிய மோட்டார் வாகனச் சட்டம் ஏழை மக்களை வதைப்பதாக இருப்பதால் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அதிகபட்சமாக ரூ.1,41,000 அபராதம் கட்டியுள்ளார். இதனால் காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட்டைச் …

Read More »

ஐஎன்எக்ஸ் மீடியா: சிதம்பரம் விசாரணை!

Published on:September 12, 2019 10:38 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, கடந்த 5ஆம் தேதி சிபிஐ காவல் முடிந்தது. இதனையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திகார் சிறைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அமலாக்கத் துறை காவலுக்குச் செல்ல தயாராக இருப்பதாக சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …

Read More »

நீதிபதி தஹில் ரமணிக்கு பெருகும் ஆதரவு!

Published on:September 10, 2019 11:46 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பதவியை ராஜினாமா செய்துவிட்ட தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. 75 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஒருவரை, 3 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட …

Read More »