mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ‘96’ ஜானுவாகும் அனுபமா!

‘96’ ஜானுவாகும் அனுபமா!

August 20, 2019 12:29 pm

அதர்வா நடிக்கும் புதிய படத்தில் நாயகி அனுபமாவுக்கு 96 படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த ஜானு கதாபாத்திரத்தின் சாயல் இருப்பதாக அதன் இயக்குநர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த நின்னு கோரி திரைப்படத்தை ஆர்.கண்ணன் ரீமேக் செய்துவருகிறார். அதர்வா, அனுபமா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு 20 நாள்கள் நடைபெற்ற நிலையில் 50 சதவிகிதம் நிறைவடைந்ததாக இயக்குநர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

“நீலாங்கரை அருகே வீடு போன்ற செட் உருவாக்கப்பட்டு பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. புதுப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஸ்டண்ட் மாஸ்டர் சிவா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்தார். நான்கு நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது” என்று கண்ணன் கூறியுள்ளார். “அதர்வா எப்போதுமே இயக்குநரின் நடிகராக இருந்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னும் தன்னை மெருகேற்றியுள்ளார். அவரது கதாபாத்திரம் இதற்கு முன் நடித்த அனைத்துப் படங்களையும் விட வித்தியாசமானது. 96 படத்தில் த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரம் போன்று அனுபமா கதாபாத்திரம் இருக்கும். ஆடுகளம் நரேன், அனுபமாவுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறவுள்ளன. ரஷ்யாவில் செப்டம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். 96 திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *