mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / 100% ஆன்லைன் டிக்கெட்!

100% ஆன்லைன் டிக்கெட்!

September 4, 2019 12:00 pm

தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்றைய தினம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரையரங்குகளில் சினிமா டிக்கெட் இனிமேல் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று கூறினார். அது இன்றைய தினம் ஊடகங்களில் பிரதான விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. இது சாத்தியம்தானா இதனால் நன்மைகள் என்ன, சிரமங்கள் என்ன என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசியபோது, “அமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய திரையரங்குகளில் ஆன்லைன் மூலமாக 30% டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 80% திரையரங்குகளில் கணிணி முறை நடைமுறையில் உள்ளது. பிற திரையரங்குகளிலும் இந்த வசதியை தமிழக அரசு நினைத்தால் சில நாட்களில் நடைமுறைக்குக் கொண்டுவர இயலும். கடந்த வருடம் திரைப்படத்துறையில் நீண்ட நாள் நடைபெற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு கொண்டுவர அரசு நடத்திய கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு தமிழகத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்பட்ட வேண்டும் என்பதாகும். அதன் பின்னர் இந்த முடிவு அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆன்லைன் டிக்கெட் வசதிக்காக திரையரங்குகளில் சில லட்சங்களை முதலீடு செய்ய வேண்டும் என்பதும் இதற்கு ஒரு காரணம். கணினிமயமாக்கி ஆன்லைன் டிக்கெட் நடைமுறை அமலுக்கு வரும்போது முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் முதல் நாள் ரசிகர் மன்றங்களுக்கு பெரும்பகுதி டிக்கெட்டுகளை திரையரங்க நிர்வாகம் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இதன் மூலம் தொடக்க காட்சி டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக விலைக்கு ரசிகர் மன்றங்கள் விற்பனை செய்வார்கள். இதன் மூலம் ரசிகர் மன்றத்திற்கும் திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட அளவு கூடுதல் வருவாய் கிடைத்தது. சினிமா டிக்கெட் முழுமையாக ஆன்லைன் மூலம் வாங்குகிற வழக்கம் நகர்ப்புறங்களிலும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம் ஆன்லைன் மூலம் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட குறைந்தபட்சம் முப்பது ரூபாய் கூடுதலாக டிக்கெட் வாங்குபவர் செலுத்த வேண்டும் தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டாம் கட்ட நகரங்களில் புறநகர் பகுதிகளில் சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்பதையே காட்சி தொடங்குகிற சில மணி நேரங்களுக்கு முன்பாகவே பார்வையாளர்கள் முடிவு செய்கின்றனர் அதிலும் ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்கள் படம் பார்ப்பதற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 150 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மத்தியதர வர்க்கத்திற்கும், சாதாரண மக்களுக்கும் பெரும் சுமையாகவே கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பெரு நகரங்களை தவிர்த்து மற்ற நகரங்களிலும் புறநகர் பகுதிகளிலும் இருக்கும் திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு வெற்றி பெறவில்லை. இந்தச் சூழலில் அமைச்சரின் அறிவிப்பு திரையரங்குகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தினாலும் அரசாங்கம் சொன்னால் நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் இதிலுள்ள சில சிரமங்களை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சரி செய்யும் பட்சத்தில் திரையரங்குகளில் எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கிறது, அதன்மூலம் அரசுக்கு வரி வருவாய் எவ்வளவு என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். அதேபோன்று ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் தியேட்டர்களில் என்ன வசூல் செய்கிறது என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்வதற்கு எளிதாக இயலும்” என்கின்றனர். “இதனால் நடிகருடைய சம்பளத்தையும் தயாரிப்பு செலவையும் படத்தின் வசூல்வருவாய்க்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு ஏதுவாக இருக்கும்” என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அமைச்சரின் அறிவிப்பு பற்றி திரையரங்கு உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி கூறுகின்ற போது, “ இது சாத்தியமான ஒன்றுதான். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத 8% என்டர்டைன்மென்ட் வரி இங்கு நடைமுறையில் உள்ளது. அதனை ரத்து செய்வதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். அதேபோன்று தமிழகம் முழுமையும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அதனை பராமரிக்க கூடிய சர்வர் ஒன்றை தமிழக அரசு செலவில் ஏற்படுத்தி பெறவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இன்றைக்கும் சாதாரண மக்கள் திரையரங்குகளில் வந்து நேரடியாக டிக்கெட் வாங்கி செல்லும் பழக்கம் நடைமுறையில் உள்ளது இதனால் அவர்களுக்கு முன்பதிவு செய்யும் போது ஏற்படக்கூடிய கூடுதல் செலவு தவிர்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது பணப்பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் தொழில்நுட்பத்தை பராமரிக்க கூடிய நிறுவனங்களுக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதையெல்லாம் டிக்கெட் வாங்கக்கூடிய பொதுமக்கள் தான் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாகவும் திரையரங்குகளில் நேரடியாக டிக்கெட் வாங்கக்கூடிய வசதியும் இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்” என்றார்.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *