mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / வெளிமாநில மருத்துவ மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!

வெளிமாநில மருத்துவ மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!

August 20, 2019 12:27 pm

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் பங்கேற்றதாகக் கூறப்படும் 126 வெளி மாநிலத்தவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவிகித இடங்கள் மாநில மாணவர்களுக்கும், 15 சதவிகித இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கலந்தாய்வில் 126 வெளிமாநில மாணவர்கள் கலந்து கொண்டனர். எனவே 2019 -20 கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வைத் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் ரத்து செய்ய வேண்டும். இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலிலிருந்து வெளிமாநில மாணவர்களை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனுவை (ஆகஸ்ட் 19) விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வெளிமாநில மாணவர்கள் எனக் கூறப்படும் 126 மாணவர்கள் எதன் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிடச் சான்று குறித்தும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அவர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *