mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / வென்றது ஜியோ: ஏர்டெல், வோடஃபோனுக்கு அபராதம்!

வென்றது ஜியோ: ஏர்டெல், வோடஃபோனுக்கு அபராதம்!

July 25, 2019 11:09 am

ஜியோ நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியபோது ஏர்டெல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் போதிய இணைப்புகளை வழங்கவில்லை என்ற புகாரில் ரூ.3,050 கோடி வழங்க, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தனது சேவையைத் தொடங்கியது. சேவையைத் தொடங்கிய சில நாட்களிலேயே வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதில் சிக்கல் இருப்பதாகப் புகார் அளித்தனர். இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்குப் போதிய அளவிலான இன்டர் கனெக்ஷன் இணைப்புகளை வழங்காததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் ஜியோ புகார் அளித்தது.

இதை உறுதிசெய்த டிராய், போதிய இணைப்புகள் வழங்காத வட்டங்களில் தலா ரூ.50 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து 21 தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவை அளிக்கும் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கும், 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவை வழங்கும் ஐடியா நிறுவனத்துக்கும் ஒரு வட்டாரத்துக்குத் தலா ரூ.50 கோடி என மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க உத்தரவிட்டது. இதற்கான ஆணையை வழங்கும்படி டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையத்திடம் முறையிடப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட இந்த வழக்கில் (ஜூலை 24) அபராதத் தொகை ரூ.3,050 கோடியை ஜியோவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்விதக் குறைபாடும் இல்லாமல் அபராதத் தொகை முழுவதையும் வசூலிக்கலாம் என்று தொலைத் தொடர்புச் செயலாளரான அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக ஏற்கெனவே பெரும் வருவாய் இழப்புகளைச் சந்தித்து வரும் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு மேலும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

டெல்லி கலவரத்தில் அதிகளவு துப்பாக்கிகள்!

டெல்லியில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடந்த கலவரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கைத்துப்பாக்கிகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *