mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / வெடிகுண்டு வீசி வழக்கறிஞரைக் கொல்ல முயற்சி!

வெடிகுண்டு வீசி வழக்கறிஞரைக் கொல்ல முயற்சி!

October 11, 2019 1:34 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில், பெண் வழக்கறிஞர் ஒருவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மலர். அதிமுக பிரமுகரான இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் தன் மகன் அழகுராஜாவுடன், ரிச்சி தெரு அருகேயுள்ள கேசினோ திரையரங்கம் வழியாக ஆட்டோவில் (அக்டோபர் 10) சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், மலர் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கிறது. ஆனால், அது தவறி விழுந்து சாலையில் வெடிக்க அங்கிருந்து பொதுமக்கள் சிதறி ஓடியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்தக் கும்பல் மலரையும் அழகுராஜாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. அவர்களிடமிருந்து தப்பித்து அழகுராஜா அங்கிருந்த காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதையடுத்து மலர் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால், அந்தக் கும்பல் ஆட்டோ மூலமாக அங்கிருந்த தப்பியது. இதைத் தொடர்ந்து காயங்களுடன் மீட்கப்பட்ட மலர், அழகுராஜா இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *