mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / விஷால் 4 கோடி வரி பாக்கி வழக்கு: நீதிமன்றம் கெடு!

விஷால் 4 கோடி வரி பாக்கி வழக்கு: நீதிமன்றம் கெடு!

August 29, 2019 11:04 am

நடிகர் விஷால் 4 கோடி ரூபாய் வரி பாக்கி வழக்கில், (ஆகஸ்ட் 28) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதையடுத்து, அவருக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. விஷால் நடத்தி வரும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்ததை முறையாக வருமான வரித் துறைக்கு செலுத்தாதது தொடர்பாக தொடரப்பட்ட ஐந்து வழக்குகளில் விசாரிப்பதற்கு நடிகர் விஷால் நேற்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் தந்த விஷாலை உங்களுக்குத் தமிழ் தெரிந்தால் தமிழிலேயே பதில் சொல்லலாம் என நீதிபதி மலர்மதி தெரிவித்தார்.

பின்னர் ஐந்து வழக்குகளின் நகல்களில் பத்து கையெழுத்துகளைப் போட்டுவிட்டு காத்திருக்கும்படி விஷாலை வெளியே அனுப்பினார். பிறகு 10 மணிக்கு வந்த விஷாலை இரண்டே முக்கால் மணி நேரம் நீதிமன்ற அறையில் நிற்கவைத்துவிட்டு பிறகு 12.45 மணி அளவில் விஷாலை விசாரித்த நீதிபதி, “தற்போது உள்ள நான்கு கோடி வருமான வரியை செலுத்திவிட்டு வழக்கை முடித்து விடுகிறீர்களா அல்லது தொடர்ந்து வழக்கை நடத்துகிறார்களா என்பது குறித்து உங்களின் ஆடிட்டரிடமும் வழக்கறிஞரிடமும் கேட்டுவிட்டு வரும் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதனால் விஷாலுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *