mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: பன்னீர்

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: பன்னீர்

November 6, 2019 2:21 pm

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. வாக்குச் சீட்டு அச்சிடுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோருதல், வார்டுகள் ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்குத் தேர்தல் பயிற்சி, சுயேச்சைகளுக்குச் சின்னங்கள் அறிவிப்பு எனத் தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி அலுவலகத்திலிருந்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக சில விதிமுறைகளை விதித்து மாநிலத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, சொந்த ஊரில் பணியாற்றும் அல்லது மூன்று வருடங்கள் ஒரே இடத்தில் பணிபுரியும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. இதுபோலவே உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

எனினும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட நான்கு வாரங்கள் வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாங்குநேரியில் வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு (நவம்பர் 5) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், “இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வர இருக்கிறது. நாங்குநேரி தொகுதிக்குப் பல நலத்திட்டங்களைச் செய்துள்ளோம். தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று பேசினார். துணை முதல்வரே தெரிவித்துள்ளதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *