mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / விம்பிள்டன்: பெடரை வீழ்த்தினார் ஜோகோவிச்

விம்பிள்டன்: பெடரை வீழ்த்தினார் ஜோகோவிச்

July 15, 2019 11:42 am

உலகின் இரு முன்னணி டென்னிஸ் வீரர்கள் மோதும் போட்டி சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது என்று எதிர்பார்த்தது போலவே விம்பிள்டன் தொடரின் 2019ஆம் ஆண்டுக்கான சாம்பியன் யார் என்ற முடிவுக்கு வர ஐந்து மணிநேரம் ஆனது. லண்டனில் (ஜூலை 14) நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரரும் செர்பிய வீரர் ஜோகோவிச்சும் மோதினர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதாக முதல் செட்டில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் முதல் செட்டை கைப்பற்றினார். முதல் செட் முடிவடைய 58 நிமிடங்கள் ஆனது. ஆனால் 2ஆவது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.

3-வது செட்டிலும் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். 4ஆவது செட்டையும் இழந்தால் பெடரர் சாம்பியன் வாய்ப்பை இழப்பார் என்றிருந்த நிலையில் போராடி 6-4 என பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களின் முடிவில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் ஐந்தாவது செட் நடைபெற்றது. இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சர்வீஸை கைப்பற்றினர். ஆனால் இறுதியில் ஆட்டம் ஜோகோவிச் வசமானது. இதனால் 2019ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் கைப்பற்றினார். கடந்த முறையும் இதே ஜோடி இறுதிப்போட்டியில் ஆட அப்போதும் ஜோகோவிச்சே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *