mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / விண்ணில் பாயும் சந்திரயான் 2

விண்ணில் பாயும் சந்திரயான் 2

July 22, 2019 10:52 am

கடந்த ஜூலை 15ஆம் தேதியன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் தயார் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டாலும் இதுவரை எந்த நாடுமே நிலவின் தென்துருவத்தில் களமிறங்கவில்லை. நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்படுகிறது. சந்திரயான் 2 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும் மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம். எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் பயணங்களில் நமது கண்டுபிடிப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 15 அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயானை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதால், குறித்த நேரத்தில் விண்கலனை ஏவ முடியாது என்று இஸ்ரோ தெரிவித்தது. அதன்பிறகு (ஜூலை 22) சந்திரயான் விண்கலத்தை ஏவ நாள் குறிக்கப்பட்டுள்ளது. சரியாக மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படும். நேற்று மாலை 6.43 மணிக்கு 20 மணி நேரத்துக்கான கவுன்டவுன் தொடங்கியது. இத்திட்டத்துக்காக ரூ.978 கோடி செலவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், நல்லபடியாக சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *