mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / சினிமா / வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் தொடர்பு

வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் தொடர்பு

January 22, 2019 10:35 am

அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை: நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில்கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்திருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் மன்றங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில்தான்.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் கட்சி நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்களின் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும். எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசில் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை.

ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு. சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசைபாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும்,  வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பதும்தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் படங்களை தயாரித்து நடிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அவர்களில் நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *