mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / ஆன்மீகம் / ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை

June 16, 2018 10:13 am

சென்னை:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. இந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.

இந்த பெருநாளில் முஸ்லிம்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து புத்தாடை அணிந்து தொழுகைக்கு சென்றனர். தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரதபோராவில் நடைபெற்ற சிறப்பு தொழுகை, மும்பை மினரா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த தொழுகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

தமிழகத்தின் பல்வேறு மசூதிகளில் முஸ்லிம்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. தொழுகையை முடித்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *