mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை: ஸ்டாலின்

யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை: ஸ்டாலின்

October 11, 2019 1:33 pm

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 8ஆம் தேதி நாங்குநேரியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். மூன்றாவது நாளாக (அக்டோபர் 10) முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய இடங்களில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பிறகு வேன் மூலமாக நாங்குநேரி, பேரூர், பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜய நாராயணபுரம், முனைஞ்சிப்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை வெற்றிபெற வைத்ததற்காக எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். அந்த வகையில் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக கை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளரைப் போல ரூபி மனோகரன் மீது நில அபகரிப்பு வழக்கு, மோசடி வழக்குகள் இல்லை. அவர் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். நாட்டைப் பாதுகாக்க எவ்வாறு தீவிரமாகச் செயல்பட்டாரோ அதுபோல தொகுதி மக்களின் பிரச்சினையிலும் தீவிர கவனம் எடுத்துக்கொள்வார்” என்று தெரிவித்தார்.

தற்போது நடப்பது அதிமுக ஆட்சியல்ல என்றும், பாஜகவின் எடுபிடி ஆட்சி எனவும் விமர்சித்த ஸ்டாலின், “முதல்வர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் அண்மையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தமிழகத்துக்கு முதலீடுகளைக் கொண்டுவந்து அதன்மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம் என்றும் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டில் ஜெயலலிதா, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். கடந்த ஜனவரியில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடைபெற்றது. இதனால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை” என்று விமர்சித்தார். இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் சேர்த்து 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், “இதுவரை ஒரு லட்சம் பேருக்காவது வேலை கொடுக்கப்பட்டிருக்கிறதா? சரி, ஆயிரம் பேருக்காவது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? அப்படியானால் அவர்களை வரிசையில் நிற்கவைத்து காட்டுங்கள்” என்று கேள்வி எழுப்பினார். அப்படி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொண்டு பாராட்டு விழாவே நடத்துவதாகவும் தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *