mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மோடி – ஷேக் ஹசீனா கையெழுத்தான ஒப்பந்தங்கள்!

மோடி – ஷேக் ஹசீனா கையெழுத்தான ஒப்பந்தங்கள்!

October 7, 2019 12:21 pm

நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (அக்டோபர் 5) பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. சந்திப்பின்போது அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் அதிகம் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பங்களாதேஷிலிருந்து பற்பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்தவர்கள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், “இந்த தேசிய குடிமக்கள் பதிவு என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. அதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று பங்களாதேஷ் பிரதமரிடம் இந்தியத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமரும் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதை உணர்ந்திருப்பதாக நமது பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர் ஷாகிதுல் ஹக் செய்தியாளரிடம் பேசுகையில், “இந்தியா – பங்களாதேஷ் உறவு இதுவரை இருந்ததைவிட மிகச் சிறப்பாக இப்போது உள்ளது அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நாங்கள் எங்கள் கண்களை எப்போதும் திறந்தே வைத்திருப்போம்” என்று கூறினார்.

இந்தியா – பங்களாதேஷ் பிரதமர்கள் சந்திப்பின்போது முக்கியமான ஏழு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சட்டோகிரம் மோங்லா, துறைமுகங்களின் பயன்பாடு குறித்த நிலையான செயல்பாட்டு விதிமுறைகள், திரிபுராவில் உள்ள சாப்ரூம் நகருக்கான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ஃபெனி நதியிலிருந்து இந்தியாவுக்கு விநாடிக்கு 1.82 கனஅடி தண்ணீர் கொடுப்பதற்கான ஒப்பந்தம், பங்களாதேஷுக்கு நாம் அளித்துள்ள கடன் தொடர்பான அமலாக்க ஒப்பந்தம், ஹைதராபாத் பல்கலைக்கழகம்- டாக்கா பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிவர்த்தனை திட்டம் புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், கடலோரக் கண்காணிப்பு முறையை அளித்தல் குறிப்பான ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் இந்தியா – பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே கையெழுத்து இடப்பட்டுள்ளன.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *