mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மோடி அரசின் 100 நாட்கள்: வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை -காங்கிரஸ்

மோடி அரசின் 100 நாட்கள்: வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை -காங்கிரஸ்

September 9, 2019 10:21 am

மோடி அரசின் முதல் 100 நாட்களில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த மே 31ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவுபெற்றது. இதனையடுத்து, ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும், வளர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை, தேசப் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும்” என்று பேசினார்.
அதே சமயம் பாஜக ஆட்சியின் முதல் 100 நாட்களில் எதுவும் நடக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (செப்டம்பர் 8) தனது ட்விட்டர் பக்கத்தில், “100 நாட்களில் வளர்ச்சி எதுவும் இல்லாத மோடி அரசுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்தை அழிப்பதும், பாஜக அரசின் மீது விமர்சனங்கள் வராமல் தடுக்க ஊடகங்களின் குரல்வளையை நெறிப்பதும்தான் நடந்துவருகிறது. நாட்டுக்கு சரியான தலைமை இல்லாமை மற்றும் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டமிட்ட இலக்குகளும் எதுவுமில்லை” என்று விமர்சித்துள்ளார். இதேபோல காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், 100 நாட்களில் வளர்ச்சி எதுவுமில்லை என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி சில பதிவுகளை பதிவிட்டுள்ளது. அதில், “பாஜக அரசு நாடாளுமன்றத்தை ஒரு அறிவிப்புப் பலகையை (notice board) போல பயன்படுத்துகிறது. மசோதாக்கள் குறித்து எந்த விவாதமோ அல்லது ஆலோசனைகளோ நடைபெறவில்லை. சம்பிரதாயத்துக்காகவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இது ஜனநாயகம் பலவீனமடைந்துவருவதற்கான அடையாளம்” என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, “எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்வதன் மூலம், அனைத்து துறைகளிலும் நீங்கள் தோல்வியடைந்ததை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று நம்புகிறீர்கள்.ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்ததை மறைக்க சிதம்பரத்தை கைது செய்தீர்கள். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுற்றபோது டி.கே.சிவக்குமாரை கைது செய்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டீர்கள்” என்று மற்றொரு பதிவில் மத்திய அரசை சாடியுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *