mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மொபைல் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு!

மொபைல் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு!

October 12, 2019 1:12 pm

130 கோடி மக்கள் தொகை கொண்ட மாபெரும் நாடான இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆண்டு தொடங்குகிறது. இது முழுக்க முழுக்க மொபைல ஆப் மூலம் நடத்தப்படுகிறது. உலகின் மாபெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய செயல் திட்ட அம்சங்கள் குறித்த பயிற்சி மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை உள்துறை அமைச்சக அதிகாரிகள் துவக்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநர்கள் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பித்தல் தொடர்பான அகில இந்திய மாநாடு, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான பயிற்சி குறித்த சந்தேகங்களை நீக்குவது குறித்து விவாதித்தது. இதில் முக்கிய முடிவாக பேனா, பேப்பரை பயன்படுத்தாமல் வர இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுக்க முழுக்க மொபைல் மூலமாகவே மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தியாவில் மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும். “காகிதப் பயன்பாட்டை ஒழித்து டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகப்பெரிய புரட்சி” என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். அதன்படியே மொபைல் ஆப்பில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. வழக்கமான முறையில் இருந்து விலகி மொபைல் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதால், அது தொடர்பான விளக்கக் காட்சிகளும், பொறிமுறைகளும் இந்த மாநாட்டில் செய்து காட்டப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும், பதிவாளர் ஜெனரலுமான விவேக் ஜோஷி தொடக்க உரையாற்றினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்கேற்புக் கடமைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 மார்ச் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது. பனி சூழ்ந்த காஷ்மீர், இமாலசப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்தே தொடங்கப்பட இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிப்பு தேதி மார்ச் 1, 2021 ஆக இருக்கும், ஆனால் பனி சூழ்ந்த ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய நாடுகளுக்கு இது அக்டோபர் 1, 2020 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிஜிட்டல் முறையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றிய பயிற்சி முகாம்கள் தொடங்குமென்றும் இதுபற்றி மாநில அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 16 மொழிகளில் நாடுமுழுவதும் சுமார் 130 கோடி மக்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதற்காக லட்சக்கணக்கான ஊழியர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் களமிறங்குகிறார்கள். இதற்கான செலவு 12 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *