mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மீண்டும் டெல்லியில் களமிறங்கும் தமிழக விவசாயிகள்!

மீண்டும் டெல்லியில் களமிறங்கும் தமிழக விவசாயிகள்!

June 22, 2019 10:42 am


தமிழக
விவசாயிகள் ஏற்கனவே டெல்லியை உலுக்கும் வகையில் தினந்தோறும் போராட்டம் நடத்தியதை தமிழகமும் இந்தியாவும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் மீண்டும் டெல்லியில் களமிறங்கத் தீர்மானித்திருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 26ஆம் தேதி டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மன்னார்குடியில் (ஜூன் 21) நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் தர வேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கர்நாடகம் மறுக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை ,தென் மேற்கு பருவ மழையை நம்பி உள்ள அணைகள் நீர் சேமிப்புக் காலமாகப் பின்பற்றப்படுகிறது. இதனைக் கர்நாடகம் பின்பற்றுவது கிடையாது. காரணம் அணைகளில் தண்ணீரைச் சேமித்தால் தமிழகத்திற்குத் தண்ணீரை வழங்க வேண்டும். எனவே இதனைத் தவிர்ப்பதற்காகவே அணைகளை மூடுவது கிடையாது. இதனைக் காவிரி மேலாண்மை ஆணையம் கண்டிப்புடன் கண்காணித்திட வேண்டும். தண்ணீர் பயன்பாட்டினை சட்டப் படி பயன்படுத்துவதை உறுதிப் படுத்த வேண்டும். உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குவதைக் கர்நாடகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. உபரி நீரைத் தடுத்து தமிழக எல்லையான ராசி மணலில் தமிழகம் அணை கட்டி பாசனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையம் உரிய அனுமதி வழங்க வேண்டும்.

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொள்கை பூர்வமாகக் கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் வரும் ஜூலை 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 26ஆம் தேதி முற்றுகைப் போராட்டமும் நடத்த உள்ளோம்என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில், குடிமராமத்துப்பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைத்து அவர்களின் பங்களிப்புடன் நிறைவேற்ற வேண்டும். பணிகள் குறித்த விபர பதாகைகள் பணி நடைபெறும் இடங்களில் வைத்திட வேண்டும். காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு இவ்வாண்டு இனி வாய்ப்பு இல்லை என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து ஒரு போகச் சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தண்ணீர் திறப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மணல் கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முன்வரவேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள், குளம், விளை நிலங்களில் மணல் கொள்ளை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த மணல் கொள்ளையில் ஈடுபடும் அரசியல்வாதிகள், மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *