mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்!

மாபெரும் வெற்றிபெற வேண்டும்: தினகரன்!

August 16, 2019 1:56 pm

ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று (ஆகஸ்டு 15) நடைபெற்றது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட மாசெக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என்று திரளானோர் கலந்துகொண்டனர். அமமுக பொருளாளரும் மாவட்டச் செயலாளருமான வெற்றிவேல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசும்போது, “விரைவில் எப்படியும் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. அதில் அம்மா முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்ளத்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பற்றி பலரும் பேசினார்கள். பெரம்பூர் தொகுதியில் நம் வெற்றிவேலுக்கு வெறும் ஏழாயிரம் ஓட்டுகள்தான் கிடைக்குமா என்பது எல்லாருக்கும் வியப்பா இருக்கு.அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும். காரணர் கிருஷ்ணர், அர்ஜுனர்தான்” என்று சொல்லிச் சிரித்த தினகரன், “அவதார புருஷர் கிருஷ்ணர் பற்றியோ, மகாபாரத மாவீரர் அர்ஜுனர் பற்றியோ பேசக் கூடாது. ஆனாலும் சிலர் பேச வைக்கிறார்கள். அந்த மகாபாரத்தில் எவ்வளவு சூழ்ச்சிகள் நடைபெற்றது என்பது எல்லாருக்கும் தெரியும். அமாவாசை அன்று துரியோதனனுக்கு டேட் கொடுத்துவிடுவார் சகாதேவன். அதுபோன்று எலக்ட்ரானிக் மெஷின்களில் நடந்த சூழ்ச்சிதான் நமது தோல்விக்குக் காரணம். இதெல்லாம் தெரிந்துதான் சில பேர் (ரஜினியை பெயர் குறிப்பிடாமல் சொல்கிறார்) பேசுகிறார்கள். ஒவ்வொருத்தரும் தங்கள் மனதில் உள்ளதை எப்படியாவது சொல்லிவிடுவார்கள். வருங்காலத்தில் இன்னும் நிறைய பேர் சொல்வார்கள்” என்று பேசினார் தினகரன். அண்மையில் மோடி, அமித் ஷாவை கிருஷ்ணர், அர்ஜுனர் என்று ரஜினி ஒப்பிட்டுப் பேசியதை மனதில் வைத்துதான் நாசூக்காக தினகரன் குறிப்பிட்டார்.

” இனியும் அந்த சூழ்ச்சிகள் எடுபடாது. அதனால் தளர்ச்சி அடையாதீர்கள். நம்மிடம் இருந்த கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்,முறையற்ற தொழில் செய்பவர்களை எல்லாம் அதிமுக அவர்கள் மேல் இருக்கும் வழக்குகளைக் காட்டி மிரட்டி இழுத்துவிட்டது. இப்போது நம்மிடம் இருப்பவர்கள் சுத்தமானவர்கள். ஒழுங்காக தொழில் செய்பவர்கள். இவர்களையும் இழுக்கலாம் என்று பணத்தாசை காட்டி இழுக்கப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம் எத்தனை நாளைக்கு? ஆட்சி அதிகாரம் இருக்கும் வரைதானே… அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை எல்லாரும் அறிவோம். ஆந்திராவில் கிரண் ரெட்டி என்று ஒரு முதலமைச்சர் இருந்தாரே இப்போது அவரை யாருக்காவது தெரியுமா? பல மாநிலங்களில் நியமன முதலமைச்சர்கள் இதுபோல இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் இவரும். ஆட்சி அதிகாரத்துக்காகத்தான் எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாதாமாதம் எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன செல்ல வேண்டுமோ அது சென்று கொண்டிருக்கிறது. அதனால், பலரும் இப்போது தேர்தலை விரும்பவில்லை. அதனால்தான் எடப்பாடிக்கு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் அதிகபட்சம் இன்னும் ஒன்றரை வருடம் தான்” என்ற தினகரன், கட்சி நிர்வாகிகள் மீது பலரும் அனுப்பும் புகார்கள் குறித்தும் பேசினார். “இங்கே இருக்கும் சகோதரர் வெற்றிவேலை எப்படி மதிக்கிறேனோ அதுபோலதான் உங்கள் எல்லாரையும் மதிக்கிறேன். என்ன… வெற்றிவேலிடம் நேரடியாக பழகிவருகிறேன். மற்றவர்களைப் பற்றி விசாரித்து அறிந்துகொள்கிறேன். அவ்வளவுதான். அதனால் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். சிலர் சிலரை பற்றி புகார்கள் அனுப்புகிறீர்கள். எது பொய் புகார், எது உண்மையான புகார் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நானும் உங்களைப் போல இருந்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றிபெற வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்” என்று பேசினார் தினகரன்.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *