mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மழையால் ஊட்டியாக மாறிய சென்னை!

மழையால் ஊட்டியாக மாறிய சென்னை!

August 17, 2019 2:32 pm

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருவது ஒருபக்கம் சிரமத்தை ஏற்படுத்தினாலும், குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்பதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மழை பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை ஆகியவை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்கு அதிகாரிகள் மீட்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னையைப் பொறுத்தவரை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்த மழை இன்று காலை முதல் இடைவிடாது பெய்தது. அண்ணாசாலை நந்தம்பாக்கம், போரூர், கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகர பேருந்துகளில் மேற்கூரையின் ஓட்டை வழியாக மழைநீர் ஒழுகியதால், பேருந்துக்குள்ளேயே பயணிகள் குடை பிடித்துப் பயணித்ததையும் காண முடிந்தது. எனினும், இதுவரை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும், குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்பதாலும் மழையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் மழையால் அப்பகுதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் பிற்பகல் வரை சென்னையில் மழை விட்டு விட்டு பெய்யும், அடுத்த இரண்டு தினங்களுக்கு இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கிருஷ்ணா, கோதாவரி நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதியைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *