mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / மழைநீரைச் சேமிக்க எந்தத் திட்டமும் இல்லை: உயர் நீதிமன்றம் கண்டனம்!

மழைநீரைச் சேமிக்க எந்தத் திட்டமும் இல்லை: உயர் நீதிமன்றம் கண்டனம்!

July 23, 2019 11:59 am

மழைநீரைச் சேமிக்கத் தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.1,101 கோடியே 43 லட்ச மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மழைநீர் பூமியில் இறங்குவதற்கு ஏதுவாக மழைநீர் வடிகால்களின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சண்முகம் என்பவர் வலியுறுத்தியிருந்தார். இம்மனு (ஜூலை 22) நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா நகர், முகப்பேர் பகுதிகளிலிருந்து அனைத்து வகையான கழிவுநீர்களும் கூவம் ஆற்றில் கலக்கின்றன எனக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசிடம் மழைநீரைச் சேமிக்க எந்தத் திட்டமும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

சென்னையில் எத்தனை நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் சில ஏன் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில் சென்னையில் கோயில்களில் உள்ள குளங்களையும் சேர்த்து மொத்த 210 நீர்நிலைகள் இருப்பதாகவும், இதில் சில நீர்நிலைகளின் சுற்றுப்புறங்கள் மட்டும் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேற்று பெய்த மழைநீர் முற்றிலும் வடிந்து விட்டதா, அதை நேரில் ஆய்வு செய்ய என்னுடன் காரில் வர மாநகராட்சி அதிகாரிகளால் முடியுமா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர், அரசுத் திட்டங்களுக்காக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வகுக்கும் செலவினங்கள் மதிப்பீட்டில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், நீர்நிலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை ஏன் நியமிக்கக் கூடாது என்றும் அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். மழைநீர் வடிகாலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *