mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / மக்களவைத் தேர்தல் 2019

மக்களவைத் தேர்தல் 2019

March 14, 2019 2:08 pm

 

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினருக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 25 ஆயிரமும், தனிதொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 10 ஆயிரமும் செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்லாம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

புனே அருகே துணிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி

மராட்டிய மாநிலம் புனே  அருகே உள்ள கிராமத்தில், ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த குடோவுனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *