mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / போட்டியின்றி தலைவரானார் பாரதிராஜா

போட்டியின்றி தலைவரானார் பாரதிராஜா

June 11, 2019 12:55 pm

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு பாரதிராஜாவை கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவரும் போது திடீரென இன்று இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இது ஒட்டுமொத்த திரையுலகையும் பாரதிராஜாவின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதற்கான தொடக்கமாக திரையுலக வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பாரதிராஜாவை ஒருமனதாக கொண்டுவருவதற்கு முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

About CmsnewsAdmin@123

Check Also

டிரம்ப் பதவிக்காலம் கேள்விக்குறி!

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *