mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பெண் தலைமை நீதிபதியின் துணிச்சல்!

பெண் தலைமை நீதிபதியின் துணிச்சல்!

September 9, 2019 10:41 am

தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து தஹில் ரமணி விலகியது துணிச்சலான முடிவு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. 75 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஒருவரை, 3 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார் தஹில் ரமணி. தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், அதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பியிருக்கிறார். தஹில் ரமணிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தஹில் ரமணிக்கு ஆதரவாக (செப்டம்பர் 8) அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி, வெறும் 2 நீதிபதிகளை மட்டுமே கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அவரது இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியத்தைக் கேட்டுள்ளார். அவர்கள் மறுபரிசீலனை கிடையாது என்று மறுத்துவிட்டனர். உடனடியாக தனது சுயமரியாதையைக் காப்பாற்றி நீதிபதி அம்மையார் தனது பதவி விலகல் கடிதத்தைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.இவரது சுயமரியாதையை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; துணிச்சலான முடிவும்கூட. தலைமை நீதிபதியின் சுயமரியாதை மற்றவர்களுக்கு நல்ல பாடமாகவும் அமையவேண்டும்” என்று புகழ்ந்துள்ளார். மேலும், “முன்பு, மிகத் திறமையும், நேர்மையும் வாய்ந்த நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தன்னை பிற மாநிலத்திற்கு மாற்றியதை எதிர்த்து, எனக்கு சுயமரியாதை இருக்கிறது; நான் அப்படி பதவி ஏற்கத் தேவையில்லை” என்று பதவியை ராஜினாமா செய்த முன்மாதிரி வரலாறும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உண்டு” என்று குறிப்பிட்டுள்ள வீரமணி, நீதிபதிகளை மற்ற மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவதால் ஏற்படும் தொல்லையும், வழக்கு விசாரணை சிக்கலும் ஏராளம் ஏற்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதியே திருத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *