mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில்ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி

பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில்ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி

April 22, 2019 10:17 am

பெங்களூரு 161 ரன். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 39-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதியது. முதுகுவலியால் கடந்த ஆட்டத்தில் ஒதுங்கி இருந்த கேப்டன் டோனி சென்னை அணிக்கு திரும்பினார்.
‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பெங்களூருவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி (9 ரன்), தீபக் சாஹர் வீசிய ‘அவுட்ஸ்விங்’கரில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (25 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), அக்‌ஷ்தீப்நாத் (24 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் அரைசதம் (53 ரன், 37 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு கட்டத்தில் 180 ரன்களை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் ரன்ரேட்டை சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
முதல் ஓவரில் 2 விக்கெட்.தொடர்ந்து ஆடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் (5 ரன்), அடுத்து வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா (0) இருவரின் விக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கபளகரம் செய்தார். மற்றொரு தொடக்க வீரர் பிளிஸ்சிஸ் (5 ரன்), கேதர் ஜாதவ் (9 ரன்) ஆகியோரை உமேஷ் யாதவ் வெளியேற்றினார். 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (5.5 ஓவர்) இழந்து திண்டாடிய சென்னை அணியை கேப்டன் டோனியும், அம்பத்தி ராயுடும் இணைந்து காப்பாற்றினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. அம்பத்தி ராயுடு 29 ரன்களில் அவுட் ஆனார். இதன் பிறகு கேப்டன் டோனி ஒரு பக்கம் போராட, மறுமுனையில் ஜடேஜா (11 ரன்), பிராவோ (5 ரன்) நடையை கட்டினர்.ஒரு ரன்னில் தோல்வி.கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த டோனி 2 மற்றும் 3-வது பந்தை சிக்சர்களாக மாற்றினார். 4-வது பந்தில் 2 ரன் எடுத்த அவர் 5-வது பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனால் கடைசி பந்தில் சென்னை அணிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இந்த பந்தை எதிர்கொண்ட டோனி அடிக்கவில்லை. அது கீப்பர் பார்த்தீவ் பட்டேலின் கைக்கு சென்றது. சென்னை வீரர்கள் ஒரு ரன் ஓட முயன்றனர். எதிர்முனையில் இருந்து ஓடி வந்த ஷர்துல் தாகூரை பட்டேல் சூப்பராக ரன்-அவுட் செய்தார்.20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றியை பெற்றது. டோனி 84 ரன்களுடன் (48 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார். தனது 3-வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. சென்னை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *