mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பிஎஸ்என்எல் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

பிஎஸ்என்எல் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

August 1, 2019 3:25 pm

சென்னை மண்ணடியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கின்றன. மண்ணடியில் கிருஷ்ணன் கோயில் தெருவில் 5 மாடிக் கட்டிடத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அடுத்தடுத்த தளத்துக்கு தீ மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5க்கும் மேற்பட்ட வாகனங்களில். 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டிடத்தில் வயர்கள், மின்சாரப் பெட்டிகள் அதிகமாக இருப்பதன் காரணமாகத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சாகுல் அமீது கூறுகையில், ”பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 3ஆவது தளத்தில் கரும்புகை நிலவி வருவதால் புகையை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து வடக்கு கடற்கரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீ விபத்தில் அலுவலகத்திலிருந்த, முக்கிய சர்வர்கள் சேதமடைந்திருப்பதாகவும், இதனால் பூக்கடை, துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *