mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பாஜகவின் செயல் தலைவர்!

பாஜகவின் செயல் தலைவர்!

June 18, 2019 10:49 am


பாஜகவின் செயல் தலைவராக ஜெகத் பிரகாஷ் நட்டா எனப்படும் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டிருக்கிறார். (ஜூன் 17) டெல்லியில் நடந்த கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்ட் போர்டு) கூட்டத்துக்குப் பின் இம்முடிவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் அறிவித்திருக்கிறார். பாஜகவின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைப்பாக கட்சியின் ஆட்சி மன்றக் குழு கருதப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும் கட்சியின் தலைவருமான அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில், ஜே.பி. நட்டா பாஜகவின் தேசிய செயல் தலைவராக நட்டா நியமிக்கப்பட்டிருக்கிறார். கூட்டம் முடிந்ததும் இதுகுறித்து கட்சியின் முன்னாள் தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“பாஜக தலைவர் அமித் ஷாவின் தலைமையில் பாஜக பல்வேறு தேர்தல்களில் வென்றிருக்கிறது. பிரதமர் மோடி, புதிய அமைச்சரவையில் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக நியமனம் செய்த பிறகு கட்சியின் விதிப்படி தலைவர் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமித் ஷா கூறினார். இதன்படி கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று கூடியது. அதில் ஜே.பி.நட்டா கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல்கள் முடியும் வரை நட்டா செயல் தலைவராக இருப்பார்” என்று அறிவித்தார் ராஜ் நாத் சிங்.

பாஜக வரலாற்றில் முதல் முறையாக செயல் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமித் ஷாவின் தலைவர் பதவிக் காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையிலும் மக்களவைத் தேர்தலை ஒட்டி அவரே தலைவராக இருக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் பாஜகவின் தலைவராக அமித் ஷாவே தொடர்வது என்றும் கட்சி வேலைகளை அதாவது உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல்கள் ஆகியவற்றுக்காகவே செயல் தலைவர் பதவி என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேபி நட்டா பிகார் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர், இமாலசப் பிரதேசத்துக் காரர். தற்போது 58 வயதாகும் நட்டா, தனது 31 வயதிலேயே இமாசலப் பிரதேச பாஜக இளைஞரணித் தலைவராக இருந்தவர். இமாசல பிரதேச அரசின் அமைச்சராகவும் 2008-10 ஆண்டுகளில் பணியாற்றியவர். 2014 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2019 மக்களவைத் தேர்தலில் சவால் மிக்க உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக நட்டா நியமிக்கப்பட்டார். 50 சதவிதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பாஜக வாங்கியதோடு 62 இடங்களையும் பிடித்து, ராகுல் காந்தியையும் தோற்கடித்தது. நட்டாவின் இந்த உழைப்புக்குப் பரிசாகவே பாஜக செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பரில் அமைப்புத் தேர்தல்கள் முடிந்ததும் நட்டா முறைப்படி தலைவர் ஆவார் என்கிறார்கள் பாஜகவில்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *