mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்!

July 19, 2019 10:30 am

2018-19ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும்படி பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதனால் இந்திய பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியுள்ளது. பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதும், பாகிஸ்தானின் பயங்கரவாதக் கொள்கையையும் புல்வாமா தாக்குதல் உறுதிப்படுத்துகிறது. பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி, இந்தியாமீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் பயங்கரவாத கட்டமைப்பை பாகிஸ்தான் கலைக்கும் வரை தேச பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். இந்தியா உட்பட பாகிஸ்தானின் அண்டை நாடுகள்மீது தாக்குதல் நடத்தும் ஜிஹாதி மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலை குறித்து இந்த அறிக்கையில், “கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதியன்று சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவச் சாவடிகளை பாகிஸ்தான் தொடர்ந்து குறிவைத்ததைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *