mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பணி செய்யாதவருக்கு அண்ணா விருது : பொன்.மாணிக்கவேல்

பணி செய்யாதவருக்கு அண்ணா விருது : பொன்.மாணிக்கவேல்

September 16, 2019 12:10 pm

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் எந்த பணியும் செய்யாமல் இருந்ததாக, குற்றம்சாட்டப்பட்ட ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டது குறித்துச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கும் சில காவல்துறை அதிகாரிகள் அண்ணா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புக் குழு ஏடிஎஸ்பி இளங்கோவும் ஒருவர். இதற்கு முன்னதாக இவர் பொன் மாணிக்கவேலுவின் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் ஏடிஎஸ்பியாக பொறுப்பில் இருந்தவர். 2018 முதல் 2019ஆம் ஆண்டு தொடக்கம் வரை சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய போது, அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்க வேல், ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு எதிராக 20 பக்க ஆண்டு பணி ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்திருந்தார். அதில் ”ஏடிஎஸ்பியாக இருந்த இளங்கோ, 2018 – 2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எந்த ஒரு வழக்கையும் விசாரிக்கவோ, துப்பு துலக்கவோ இல்லை. பணியில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டார். ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படவேண்டிய அசையா சொத்து விவரப் பட்டியலைக் கூட அவர் 8 ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை அப்போதைய தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. அதே போன்று ஏடிஎஸ்பி இளங்கோவும் சக அதிகாரிகளுடன் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகக் குற்றம்சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து இளங்கோ கடலோர காவல்படைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் உயர் அதிகாரியால் திறமையற்றவர் என்று அறிக்கை அளித்த ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா விருது எப்படி அறிவிக்கப்பட்டது ? என ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கிடையே ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஏடிஎஸ்பி இளங்கோ, தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பொன்.மாணிக்கவேல் செயல்பட்டு வருகிறார். தன்மீதுள்ள புகாருக்கு டிஜிபியிடம் தக்க விளக்கம் அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *