mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / பணப்பட்டுவாடா, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின்

பணப்பட்டுவாடா, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின்

September 26, 2019 12:04 pm

89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டுமென தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் . ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்தது குறித்த ஆவணங்கள் சிக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல, பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரி, திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மருது கணேஷும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நேற்று முன்தினம் நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், “பணப்பட்டுவாடா தொடர்பான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், “இந்த வழக்கு மேல் முறையீட்டுக்கு உகந்ததல்ல என தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆலோசனை வழங்கி இருக்கிறார்” என்று மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதிகள் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வைரக்கண்ணன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (செப்டம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அதிமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்திருப்பதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன், ஆளுங்கட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கட்டுப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவையே அவமதிப்பதும், வருமான வரித் துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையை உதாசீனப்படுத்துவதும் கடும் கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது குறித்து முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி, பெயர்களே இல்லாமல் எஃப்ஐஆர் போட்ட போலீஸ் அதிகாரி, உயர் நீதிமன்ற உத்தரவின்கீழ் முறையாக இந்த வழக்கைக் கண்காணிக்காத அப்போதைய இணை போலீஸ் கமிஷனர், இதுவரை தனி நீதிபதியின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யாத மாவட்டத் தேர்தல் அதிகாரி ஆகிய அனைவர் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையமே தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரே உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளவர், “இல்லாவிட்டால், இந்திய வாக்காளர்கள், தேர்தல் நடைமுறைகளின் மீதும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதும் கொண்டுள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டுப் போய்விடும்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *