mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: விஜயபாஸ்கர்

நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: விஜயபாஸ்கர்

July 23, 2019 12:00 pm

தமிழகத்தில் ஒருபோதும் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அதை தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. மக்களவைத் தேர்தலின்போது நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக வாக்குறுதி அதிமுக, திமுக என இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு நேஷனல் எக்சிட் டெஸ்ட் எனப்படும் ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் (ஜூலை 22) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நெக்ஸ்ட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்த முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தன. அதனால் 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது” என்று கூறினார். மேலும், “நிலைக்குழுவிலிருந்து தமிழகத்தின் கருத்தைத்தான் எதிர்பார்த்தார்கள். நம்முடைய கருத்துகளையும் முன்வைத்துள்ளோம். அதில் பலவற்றை ஏற்றுக்கொண்டார்கள்” என்று தெரிவித்த அவர், இருப்பினும் நெக்ஸ்ட் எனப்படும் பொதுத் தேர்வை நாம் வேண்டாம் என்கிறோம். ஒருபோதும் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

டிரம்ப் பதவிக்காலம் கேள்விக்குறி!

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *