mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / நீதிபதி தஹில் ரமணிக்கு பெருகும் ஆதரவு!

நீதிபதி தஹில் ரமணிக்கு பெருகும் ஆதரவு!

September 10, 2019 11:46 am

பதவியை ராஜினாமா செய்துவிட்ட தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. 75 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஒருவரை, 3 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார் தஹில் ரமணி. இன்றைய தினம் தனக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளையும் அவர் விசாரிக்கவில்லை. இந்த நிலையில்தான் தலைமை நீதிபதிக்கு ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், “சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான தஹில் ரமணியை நாட்டின் சிறிய நீதிமன்றத்துக்கு மாற்றும் உத்தரவு இயல்பானது அல்ல. இந்தியாவில் ஒரு சிலர்தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கும் இந்த மாதிரி நெருக்கடியை அளிப்பது, நீதிபதி தகில் ரமணியை மட்டுமின்றி, ஒட்டு மொத்த பெண்களையும் அவமதிப்பது போன்று உள்ளது” என்று சாடியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, “தலைமை நீதிபதி தஹில் ரமணி, குஜராத்தில் பணிபுரிந்தபோது மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்தால், தற்போது அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நீதித்துறையிலும் அரசியல் தலையீடு எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் (செப்டம்பர் 9) போராட்டம் நடத்தினர். அவர்கள் இடமாற்ற முடிவினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபோலவே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *