mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / சினிமா / நயன்தாரா, அஞ்சலி, சன்னிலியோனிடம் பிடித்தது என்ன? ஜெய் ஓபன் டாக்

நயன்தாரா, அஞ்சலி, சன்னிலியோனிடம் பிடித்தது என்ன? ஜெய் ஓபன் டாக்

February 16, 2019 3:55 pm

சுப்ரமணியபுரம், ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் என பல்வேறு படங்களில் நடித்திருக்கும் ஜெய் தற்போது பார்ட்டி, நீயா2, மதுர ராஜா, கருப்பு நகரம் படங்களில் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலியுடன் ஜெய்யை இணைத்து காதல் கிசுகிசு வலம் வருகிறது. இதுபற்றி இதுவரை மவுனம் காத்து வந்த ஜெய் தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது: நயன்தாரா, அஞ்சலி என பல்வேறு ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவர்களுடன் நான் நட்பாக பழகுகிறேன். அஞ்சலியுடன் இணைத்து காதல் கிசுகிசு வருகிறதே என்கிறார்கள்.
தற்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்துவதே முதல்வேலை. ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித் தேன். நான் நடித்த நடிகைகளில் மிகவும் மென்மையானவர் நயன்தாரா. அவருக்கு ரசிகர்கள் அதிகம்.  படப்பிடிப்பு நேரத்தில் நிறைய கூட்டம் வந்தாலும்  டென்ஷனும் ஆகாமல் மென்மையாக எல்லோரிடமும் பழகுவார். மதுர ராஜா படம் மலையாளத்தில் உருவாகிறது.
இதில் மம்மூட்டி தம்பியாக  நடிக்கி றேன். இருவரும் தமிழ்பேசி நடிக்கிறோம். இப்படத்தில் சன்னி லியோனுடன் மீண்டும் நடனம் ஆடியிருக்கிறேன். ஏற்கனவே  அவருடன் வடகறி படத்தில் நடனம் ஆடினேன். அவரைப்பற்றி கேட்கிறார்கள். நன்றாக பழகுவார். மற்றபடி  அவருடன் டுவிட்டரிலோ, தொலைபேசியிலோ பேசுவதோ, போட்டோ ஷேர்  செய்துகொள்வதோ கிடையாது.
நான் நடிக்கும் பட புரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்ற புகார் என் மீது இருக்கிறது. எனக்கு மனப்பக்குவம் வந்திருக்கிறது. இனிமேல் நான் நடிக்கும் எல்லா படங்களின் புரமோஷன்களிலும் கலந்துகொள்வேன். நடிகையை மணப்பீர்களா என்கிறார்களா? திருமணத்தை பற்றி இப்போது யோசிக்கவில்லை. அதேநேரம் என் வீட்டில் என் பர்மிஷன் இல்லாமல் எனக்கு மணப்பெண் தேட மாட்டார்கள். இவ்வாறு ஜெய் கூறினார்.

About CmsnewsAdmin@123

Check Also

ரஜினியோடு நடிக்க மறுத்தவருடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி

ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *