mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / நடிகர் தனுசை மகன் என உரிமை கோரும் தம்பதி

நடிகர் தனுசை மகன் என உரிமை கோரும் தம்பதி

March 29, 2019 11:14 am

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் தங்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கோரி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

பின்னர் இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி சான்றிதழ் அங்க அடையாளங்கள் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த ஐகோர்ட்டு, கதிரேசன்-மீனாட்சி தம்பதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கீழ்க்கோர்ட்டை நாடுமாறும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், தற்போது கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் தமிழ்நாட்டில் இந்த வழக்கை விசாரித்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும், எனவே இந்த வழக்கை மதுரையில் இருந்து கேரளா அல்லது கர்நாடக மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்திய பிரதமர் மோடி என்னிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *