mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தொடர் சாதனையில் இந்திய கிரிக்கெட் டீம்…

தொடர் சாதனையில் இந்திய கிரிக்கெட் டீம்…

November 26, 2018 4:21 pm

சிட்னி :
இந்தியா கடந்த பத்து டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வி அடையாமல் சாதித்துள்ளது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா 1-1 என சமன் செய்தது. இதன் மூலம் இந்தியா தான் கடைசியாக சந்தித்த பத்து டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வி அடையாமல் இருந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியா கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஒரு போட்டி டி20 தொடரை வென்றது. அப்போது இருந்து டி20 தொடர்களை இழக்காமல் பயணித்துக் கொண்டு வருகிறது இந்திய அணி. இலங்கைக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியோடு தொடரை 1-1 என சமன் செய்தது.

அதன் பின்னர் இந்திய மண்ணில் நியூசிலாந்து தொடரை 2-1 எனவும், இலங்கை தொடரை 3-0 எனவும் வென்றது. பின்னர் தென்னாபிரிக்காவில் நடந்த தொடரில் 2-1 என வெற்றி பெற்றது.

அதன் பின்னர் ரோஹித் தலைமையில் நிதாஸ் ட்ராபி டி20 தொடரை வென்றது. அதன் பின்னர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை வென்றது இந்தியா. அதன் பின் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்ற இந்தியா, தற்போது ஆஸ்திரேலிய டி20 தொடரை சமன் செய்துள்ளது.

எனினும், இந்தியா, ஆஸ்திரேலிய டி20 தொடரை சமன் செய்ததன் மூலம் தொடர்ந்து எட்டாவது டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. ஆஸ்திரேலிய டி20 தொடரின் முதல் போட்டியை 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அடுத்த போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், கடைசி போட்டியை வென்று தொடரை சமன் செய்தது இந்தியா.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *