mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / தேசிய விருது நிச்சயம் – அசுரன்!

தேசிய விருது நிச்சயம் – அசுரன்!

September 17, 2019 1:05 pm

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றி மாறன் – தனுஷ் இணையும் படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களின் வெற்றிக்கு பின் இவர்களது கூட்டணியில் உருவான நான்காவது படமென்பதால், அசுரன் மீதான எதிர்பார்ப்பும் தலைப்பைப் போலவே அசுரத்தனமாக உள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அசுரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ். வெற்றி மாறனின் திரைப் பயணத்தில் தொடர்ந்து பயணித்து வருபவர் இவர். நேர்த்தியான ஒளிப்பதிவு, இயற்கையான ஒளியமைப்பு, யதார்த்தமான கேமரா அசைவுகள், நிறங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது என தனித்துவமான ஒளிக்கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் வேல்ராஜ்.

தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்கள் என ஒளிக்கு மொழியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பங்காற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வெற்றி மாறனோடு கைகோர்த்தவர். வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் ஆகிய இரண்டு வெற்றித் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், அசுரன் படம் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்: “இந்த வருஷம் எல்லோருமே தமிழ் நாட்டுக்கு விருது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டாங்க. கண்டிப்பாக அசுரன் அடுத்த வருட தேசிய விருதை அள்ளிக்கொண்டு தான் வரும். அசுரன் படப்பிடிப்பை தேரிக்காடு எனும் இடத்தில் நடத்தினோம். 8 நாட்களுக்கு மேல் அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கினோம். எல்லோருடைய ‘ஷூ’ அடிபாகமே கழண்டு விழும் அளவிற்கு வெய்யில் அங்கிருந்தது. அந்த இடத்தில தனுஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார் என நம்மால் புரிந்து கொள்ளக்கூட முடியாது. பெட் ஷீட்டை விரித்து அவரை அமர்த்துவோம். அப்போதும் அங்கிருக்கும் வெய்யிலை அவரால் தாங்கமுடியாது. அவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு காட்சியையும் படமாக்கினோம். வெற்றி மாறன் இயக்கத்தில் அதி சீக்கிரமாக வெளிவரும் படமென்று அசுரனைத் தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படத்திற்கும் வழக்கமாக 3 அல்லது 4 வருடங்கள் எடுத்துக் கொள்வார். வட சென்னை ரிலீசுக்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் உடனடியாக வெளியாகும் படமென்றால் அது அசுரனாகத் தான் இருக்கும்.” கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *