mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / திமுக முதுகெலும்பு இல்லாத கட்சி: எடப்பாடி பழனிசாமி!

திமுக முதுகெலும்பு இல்லாத கட்சி: எடப்பாடி பழனிசாமி!

August 8, 2019 10:41 am

திருவள்ளூரில் மழைநீர்ச் சேமிப்புக்காகக் குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகதான் முதுகெலும்பு இல்லாத கட்சி என்று விமர்சித்துள்ளார். தமிழகத்தில் 2018ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களைத் தமிழக அரசு முறையாகப் பராமரிப்பதில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குடிமராமத்துத் திட்டப் பணிகளும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை, அதற்குப் போதுமான நிதியை அரசு ஒதுக்குவதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (ஆகஸ்ட் 7) திருவள்ளூர் மாவட்டம் கூரம்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “2018இல் குடிமராமத்துத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.328 கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 90 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2019-20ஆம் ஆண்டுக்கான குடிமராமத்துப் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழகமெங்கும் 1,829 ஏரிகள் தேர்வுச் செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார். மேகதாது அணை கட்ட, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்டதை வரவேற்பதாகத் தெரிவித்த முதல்வர், மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்த கோரிக்கைக்கு நல்ல பதில் கிடைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார். மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரைப் பார்த்து திமுக எம்.பி டி.ஆர் பாலு, முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறியிருக்கிறாரே எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “யார் முதுகெலும்பு இல்லாதவர்கள்? முதுகெலும்பு இல்லாத கட்சி என்றால் அது திமுகதான். திமுக சுயநலமான கட்சி. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்திலிருந்த திமுக தமிழகத்துக்காக என்ன செய்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

About CmsnewsAdmin@123

Check Also

டிரம்ப் பதவிக்காலம் கேள்விக்குறி!

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *