mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

September 17, 2019 1:03 pm

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி, ஆர்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியே இருக்க வேண்டும் என்று இந்தி தினத்தை ஒட்டி அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு வலுக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் (செப்டம்பர் 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழுக்கும் மாநில மொழிகளுக்கும் எதிராக பாஜக அரசு எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கிவிட்டு, “பாஜக அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டையே சிதைத்துவிடும் ஆபத்து இருப்பதை உணர்ந்து, திமுக வரும் 20 ஆம் தேதி தமிழகத்தின் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த இந்த உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முடிவு செய்கிறது. இதில் இளைஞர்கள், மாணவ மாணவியர், சான்றோர், ஆன்மிக வழி நடப்போர் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஆர்பாட்டப் போர்ப் பாட்டு முழங்கிட இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *