mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / தமிழ் புறக்கணிக்கப்படுகிறது: ஸ்டாலின்

தமிழ் புறக்கணிக்கப்படுகிறது: ஸ்டாலின்

September 16, 2019 12:09 pm

ம.தி.மு.க. சார்பில் சென்னை நந்தனத்தில் (செப்டம்பர் 15) நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது” எனக் கூறினார். மு.க. ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் கூறியதாவது: “இந்த மாநாட்டை திறந்து வைப்பது என்பது என் வாழ்நாளில் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் தான் நம்முடைய முகம், நம்முடைய முகவரி, அதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” “நீர் அடித்து நீர் விலகாது என்பதைப் போல் நாம் ஒன்றாக ஆகியிருக்கிறோம். வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் நாம் ஒரு தாய் மக்கள். அந்த தாய் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். பிரிந்து கிடக்கக்கூடிய தமிழர்களை இணைக்கக் கூடிய வலிமை சில சொற்களுக்குத்தான் உண்டு. அத்தகைய சொற்களில் ஒன்று, தமிழன்; அத்தகைய சொற்களிள் ஒன்று, திராவிடம்; அத்தகைய சொற்களிள் ஒன்று, தந்தை பெரியார்; அத்தகைய சொற்களிள் ஒன்று, அறிஞர் அண்ணா. அத்தகைய சொற்களிள் ஒன்று, தலைவர் கலைஞர். நாம் வேறு வேறு இயக்கங்களில் இருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம், நிற்போம். நம்மை ஒற்றுமைப்படுத்துவதே இந்த சொற்கள் தான். எதை விட்டுக் கொடுத்தாலும் இந்த ஐந்தையும் நாம் ஒரு காலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அதனால் தான் மதிமுக மேடையில் ஸ்டாலின் நின்று கொண்டிருக்கிறான். திமுக மேடையில் அண்ணன் வைகோ நின்று கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதிமுக மாநாட்டில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவே ஒரு மாதிரி இருந்தாலும், தமிழகம் தனி மாதிரி என்று நாம் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். தனி மாதிரியாக இருந்தாலும், ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சேர்த்து நாம் தான் இன்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறினார். மேலும் பொருளாதார வீழ்ச்சி, தொழில் நிறுவனங்கள் மூடல், காஷ்மீர் பிரச்சனைகளை அடிகோடிட்டு காட்டிய ஸ்டாலின், “இந்த நிலையில் தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு புறம் கலாச்சார தாக்குதல், மறுபுறம் ரசாயன தாக்குதல். ஒவ்வொரு நாளும் போராடி போராடித் தான் நம் உரிமையை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியை எதிர்த்து இன்று நேற்றல்ல 1938-லிருந்து போராடி வருகின்றோம். 1965ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டக்களத்தையே இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். 1987-லிலே சட்ட எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கிறோம். இப்போதும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறோமா இல்லையா? அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள்; நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ” “பேரறிஞர் அண்ணா சொன்னார், முல்லைக்காட்டில் எருமை புகுந்தது போல, நெற்களஞ்சியத்திலே புயல் புகுந்தது போல, சோலையிலே சூறாவளி புகுந்தது போல, மலர் தோட்டத்திலே தீ சூழந்தது போல, மத்திய மாநில அரசுகளால் மக்களிடைய வாழ்க்கை இன்று சிதைந்து கொண்டிருக்கிறது” என அண்ணா கூறிய உவமையோடு மத்திய மாநில அரசை விமர்சித்தார் ஸ்டாலின். போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாராகிக் கொண்டிருக்கிற போர்க்களத்திற்கு அத்தனை பேரும் புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அது தான், அறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாடக்கூடிய இந்த நாளில் நாம் எடுக்கக்கூடிய உறுதிமொழியாக இருக்கவேண்டும்” எனக் கூறினார் ஸ்டாலின்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *