mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / தமிழகம் – தெலங்கானாவுக்குப் பாலமாகச் செயல்படுவேன்: தமிழிசை

தமிழகம் – தெலங்கானாவுக்குப் பாலமாகச் செயல்படுவேன்: தமிழிசை

September 3, 2019 12:38 pm

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார் தமிழிசை. அரசியல் தலைவர் மட்டுமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே வரும் 8ஆம் தேதி தெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் சென்னையில் (செப்டம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “தமிழகத்துக்குப் பணியாற்ற வேண்டியது எனது உரிமை. தெலங்கானாவுக்குப் பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன். தமிழ் மகளாகவும் தெலுங்கிசையாகவும் தேசியத்தின் குரலாக ஒலிப்பேன். பதவியேற்பு விழா நடத்துவது தொடர்பாக என்னிடம் ஆலோசிக்க தெலங்கானா அதிகாரிகள் வருகின்றனர். அதன் பின்பு பதவியேற்பு விழா நடத்தும் நாள் குறித்துத் தெரியப்படுத்துகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், “தமிழக மக்கள் என்மீது வைத்துள்ள பாசம், தமிழகத்துக்கு இன்னும் அதிகமாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியால் இன்னொரு மாநிலத்துக்கும் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியல் களத்திலிருந்து வெளியேறவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டுச் செயல்படவுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *