mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / தனுஷ் படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலங்கள்!

தனுஷ் படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலங்கள்!

September 4, 2019 11:58 am

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ இணைந்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒப்பந்தமானது. பேட்ட திரைப்படத்திற்கு முன்பே இக்கூட்டணி இணையவிருந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் மற்ற படங்களில் ஒப்பந்தமானதால் இந்த கூட்டணி அமைவது தள்ளிப்போனது. தற்போது இவர்கள் இணையும் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசி காந்த் தயாரிக்கிறார். ஐஸ்வர்யா லஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார்.

கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படம் முழுக்க லண்டனை களமாகக்கொண்டு தயாராகவுள்ளது. தற்போது கார்த்திக் சுப்புராஜ், சசிகாந்த், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் உலகப் புகழ்பெற்ற நடிகரான அல் பசீனோ-வை நடிக்க வைக்க படக்குழு தீவிர முயற்சிகள் எடுத்து வந்தது. ஆனால், அல் பசீனோவை நடிக்க வைக்கும் முயற்சிகள் கைகூடவில்லை. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரேவ் ஹார்ட், டிராய், பென்-ஹர், வொண்டர் வுமன் போன்ற படங்களில் நடித்தவர். பிரபல எச்.பி.ஓ வெப் சீரிஸான கேம் ஆஃப் திரோன்ஸில் ‘நைட் வாட்சில்’ லார்ட் கமாண்டராக நடித்தவர் இவர். தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா இந்த வாரம்(செப்டம்பர் 6) வெளியாகவுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கின்றது. இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகின்றது. அதனைத் தொடர்ந்து, தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இக்கூட்டணி இணையவுள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

About CmsnewsAdmin@123

Check Also

டெங்கு: அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *