mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ஜெயலலிதாவின் பயோகிக் தாமதம் பற்றி நித்யா மேனன்!

ஜெயலலிதாவின் பயோகிக் தாமதம் பற்றி நித்யா மேனன்!

August 3, 2019 12:32 pm

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோகிக் பற்றி நித்யா மேனன் பகிர்ந்துள்ளார். நித்யாமேனனை கதாநாயகியாகக் கொண்டு தி அயர்ன் லேடி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் பயோபிக் உருவாகவுள்ளது. இயக்குநர் பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கவுள்ளார்.அதே சமயம், கங்கணா ரனாவத் நடிப்பில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல் விஜய்யும் பட வேலைகளை தொடங்கியுள்ளார். கௌதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். அக்டோபர் மாதம், ஏ.எல். விஜய் – கங்கனாவின் தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அப்படத்திற்காக, தமிழ் மொழி உச்சரிப்பு, பரத நாட்டியம் கற்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கங்கனா. இந்நிலையில், மலையாளத்தில் நித்யா மேனன் நடித்துள்ள, ராஜீவ் குமார் இயக்கிய கொளம்பி படத்திற்காக செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த நித்யா மேனன், “தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறைய முன் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும். இயக்குநர் பிரியதர்ஷினி இந்த படத்தை சென்சேஷனான விஷயமாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் இப்படத்திற்கு நியாயம் செய்ய விரும்புகிறோம். எனவே, உடனடியாகத் படத்தைத் தொடங்கி எந்தத் சமரசத்திற்கும் உட்பட விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம்” எனக் கூறியுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *