mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ஜப்பானில் வாழும் இந்தியர்களிடம் மோடி உரை!

ஜப்பானில் வாழும் இந்தியர்களிடம் மோடி உரை!

June 28, 2019 12:35 pm


ஜி
20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார். (ஜூன் 27) ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேவை நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பின்னர் ஜப்பானில் வாழும் இந்திய மக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு மோடி உரையாற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த இந்தியர்கள், “மோடி, மோடி”, “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜெய்என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மோடி, “அறுதிப் பெரும்பான்மை கொண்ட அரசு என்பது வெளியுறவுகளில் மிக முக்கியமானது. ஓர் அரசுக்கு கூடுதல் பெரும்பான்மை கிடைப்பது என்பது வளர்ச்சி மட்டுமல்ல, அது நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

130 கோடி மக்களும் இணைந்து வலுவான அரசை உருவாக்கியுள்ளனர். இந்த பெரும்பான்மை உண்மைக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்ததாகும். “அனைவரும் இணைந்த, அனைவருக்குமான வளர்ச்சிஎன்ற கொள்கையை எனது அரசு பின்பற்றும். இந்தியா மேலும் வலிமையடையும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஜப்பானுக்கு முக்கிய பங்குள்ளது. இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக உருமாற்றுவதற்கு ஜப்பான் உதவிபுரியும். ஜப்பானுடனான உறவுகள் இன்று உருவானவை அல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவானவை. இருநாடுகளின் கலாச்சாரத்துக்கும் இருதரப்பிலும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெற்றது. அதற்கான அடித்தளம் விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராதாபினோத் பால் உள்ளிட்டோரால் அமைக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டில் நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாஜப்பான் நட்பை வலுப்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அரசுகள், தூதர்களைக் கடந்து உறவை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்தோம். வாகன உற்பத்தியில் ஒருகாலத்தில் இருநாடுகளும் கூட்டணி அமைத்தன. இப்போது புல்லட் ரயில் பணிகளுக்காகக் கூட்டணி அமைத்துள்ளன. ஜப்பானின் முதலீடுகள் தடம் பதிக்காத இடமே இந்தியாவில் இல்லை. அதேவகையில் இந்தியாவின் மனிதவளம் ஜப்பானுக்குப் பங்களித்து வருகிறதுஎன்று தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

வைகோவை – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *