mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / ஆன்மீகம் / சென்னை ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

January 5, 2019 3:03 pm

சென்னை:
சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஜனவரி 1 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசால் தடை விதிக்கபட்டுள்ளது. அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்போர் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தபட்டிருந்தனர்.

குறிப்பாக வணிக வளாகங்கள் பெரிய நிறுவனங்களில் அதிகபடியாக பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் அதை கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டிருந்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருவிக நகர் 6வது மண்டலம் சார்பில் மத்திய மண்டல அதிகாரி ஆனந்த்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள கடைகளை சோதனை செய்தனர்.

அந்த பகுதியில் இருந்த பிரபல ஓட்டலில் சோதனை மேற்கொண்ட பொழுது 3 டன் எடை கொண்ட உணவு அருந்தும் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் குடிநீர் கிளாஸ், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை கைப்பற்றினர்.

பின்பு அருகிலிருந்த மற்ற தனியார் உணவங்களிலிருந்தும் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஸ்பெக்டரம் மாலில் உள்ள பிரபல வணிக நிறுவனத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *